Saturday, 26 September 2026 10:32:24 PM

100 மில்லியன் ரூபாய் இலஞ்சக் குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்சவுக்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, அவரது பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோரின் வாதங்களை கருத்தில்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.